Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

பி.இ. கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை செலுத்த இன்று கடைசி


பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க உள்ள மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க இதுவரை 6,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.




இன்று நள்ளிரவு வரை... பி.இ. ஆன்லைன் முதல் சுற்றில் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தலாம்; முன்வைப்புத் தொகைக்கான வரைவோலையாகச் செலுத்த விரும்புவோர், உதவி மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் செல்ல வேண்டும். முன்வைப்புத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.