Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 15, 2018

புதிய பாடநூல்களால் புத்தொளி பெறும் அரசுப்பள்ளிகள் :


அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும்அரசுப் பள்ளிகளின்மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கச் செய்யவும்தமிழக அரசின்பள்ளிக்கல்வித் துறையில்பல்வேறு ஆக்கப்பூர்வமானமாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. நடப்புக் கல்விஆண்டில் 1,6,9,11 ஆகியவகுப்புகளுக்கு புதியபாடநூல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இது வரை சிபிஎஸ்இபாடநூல்களிலும் பிறமாநிலப் பாடநூல்களிலும்,தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளில்பின்பற்றப்படும் தனியார்பதிப்பகப் பாட நூல்களிலும் பயன்படுத்தப்படாத புதியதகவல் தொழில் நுட்பவளங்கள், இணையவளங்கள் தமிழத்தில்உருவாக்கப்பட்டுள்ள புதியபாட நூல்களில் இணைக்கப்பட்டுள்ளன.



புதிய பாடநூல்களில் உள்ளதகவல் தொழில் நுட்பம்மற்றும் இணைய வளங்கள் மாணவர்களின் அறிவைவளப்படுத்தும் வகையில்உருவாக்கப் பட்டுள்ளன.அகில இந்திய அளவிலானமருத்துவம் போன்ற உயர்கல்விக்கானஅனைத்துப் போட்டித்தேர்வுகளை அரசுப் பள்ளிமாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தயார்படுத்தவும் ஏற்றவகையில் புதியபாடநூல்கள் பல்வேறுதுறைகளைச்சேர்ந்தவர்களின்ஆலோசனைகளைப்பெற்று உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குப் புதியபாடநூல்கள்வழங்கப்பட்டுள்ளநிலையில் புதியபாடநூல்களில் உள்ளகற்பித்தல்செயல்பாடுகளைவகுப்பறைகளில்ஆசிரியர்கள்வெற்றிகரமாகநிறைவேற்றுவதற்கானபயிற்சியை கல்வித்துறைஅனைத்து அரசுப் பள்ளிஆசிரியர்களுக்கும்வழங்குகிறது.

தமிழகத்தில் உள்ளஅனைத்துமாவட்டங்களிலும் ஒன்றியஅளவில் ஆசிரியர்களைஒருங்கிணைத்துபாடவாரியாக ஒவ்வொருபாடத்திற்கும் இரண்டுநாட்கள் பயிற்சிவழங்கப்படுகின்றன.கடந்தவாரம் திருப்பூர்மாவட்டத்தில் பயிற்சியைஅளிப்பதற்கானஆசிரியர்களுக்குக்கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில்கல்வித்துறைச் செயலாளர்த.உதயச்சந்திரன் அவர்கள்பங்கேற்று புதியபாடநூல்கள் குறித்துஉரையாடினார். மிகுந்ததரத்தோடும் தமிழகமாணவர்களின் கல்விநலன் சார்ந்தஅக்கறையோடும்உருவாக்கப்பட்டுள்ளபாடநூல்களின் வெற்றிஆசிரியர்களின் கைகளில்உள்ளது என்று அப்போதுகுறிப்பிட்டார்.



அதனைத் தொடர்ந்துகாங்கயம் ஒன்றியத்தில்கணிதம், சமூக அறிவியல்பாடங்களுக்கnன பயிற்சிகடந்த திங்கள் முதல்நான்கு நாட்களாககாங்கயம் ஜேசிஸ் மெட்ரிக்பள்ளியில் நடைபெற்றன.நாளை முதல் தமிழ்,ஆங்கிலம், அறிவியல்பாடங்களுக்கானபயிற்சிகள் தொடர்ந்துநடைபெற உள்ளன.

முதல் நாள் பயற்சியைபல்லடம் கல்வி மாவட்டக்கல்வி அலுவலர் திரு.கு.பெ. கனகமணி அவர்கள்பார்வையிட்டு பயற்சியின்முக்கியத்துவத்தைவிளக்கினார்.

காங்கயம் வட்டாரக் கல்விஅலுவலர்கள்இரா.மகேந்திரன், பா.சுசீலாஆகியோர் காங்கயத்தில்நடைபெறும் பயிற்சியின்வழிகாட்டுநர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.பயிற்சியின் மையப்பொறுப்பாளர்களாகஇலக்கும நாயக்கன்பட்டிஉயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்தே.மரிய லூயிஸ்,காங்கயம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) ல.சுரேஷ்ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில்அனைத்துஒன்றியங்களிலும்நடைபெற்று வரும் பயிற்சிமையங்களை முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்திஅவர்கள் நேரடியாகப்பார்வையிட்டும் வருகிறார்.



புதிய பாடநூல்கள் மூலம்அரசுப்பள்ளிகளில் நடக்கும்மாற்றங்களால்அரசுப்பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கைவருங்காலங்களில்அதிகரிக்கும் நிலைஉருவாகியுள்ளது