Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 5, 2018

முதுநிலை பொறியியல் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற வெள்ளிக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

www.annauniv.edu/tanca2018 என்ற இணையதளம் மூலம் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தை பதிவைச் செய்யலாம். அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.



இளநிலை பொறியியல் படிப்புடன், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் ("டான்செட்') தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்-லைன் மூலம் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஜூலை 17-ஆம் தேதி கடைசி நாளாகும்.