Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 28, 2018

கால்நடை மருத்துவக் கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின


நடை மருத்துவம் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு நடைபெற்று வந்த முதல்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. கலந்தாய்வின் முடிவில் அனைத்து இடங்களும் நிரம்பின.




இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்), உணவுத்தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி, பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 24 -ஆம் தேதி தொடங்கியது.

பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்பில் மொத்தம் 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 54 இடங்கள் போக மீதம் உள்ள 306 இடங்களுக்கு நடைபெற்ற சிறப்புப் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் கலந்தாய்வின் முடிவில் 306 இடங்களும் நிரம்பின. 



கலந்தாய்வு நிறைவு: மூன்று பி.டெக் படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒதுக்கீட்டுக்குப் போக மீதம் உள்ள 88 இடங்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 588 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 126 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் 88 இடங்களும் நிரப்பப்பட்டன. 

இதனையடுத்து கால்நடை மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவுபெற்றது.
ஆகஸ்ட் 6 கடைசி: மூன்று நாள் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேருவதற்கு ஆகஸ்ட் 6 -ஆம் தேதி கடைசியாகும். இந்தத் தேதிக்குள் கல்லூரியில் சேராவிட்டால், அந்த இடம் காலியாக கருதப்பட்டு இரண்டாம்கட்ட கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படும்.

2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது?:தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 

இதன் காரணமாக கால்நடை மருத்துவக் கலந்தாய்வின் இரண்டாம்கட்ட கலந்தாய்வு தேதிகளைத் தீர்மானிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் கால்நடை மருத்துவப் படிப்புக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.