சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.
இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் இந்த புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27-ஆம் தேதி வரை தொடர்ந்து புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பிற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம்.
இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.