Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 20, 2018

ஆகஸ்ட் 25 முதல் பி.இ. துணைக் கலந்தாய்வு


பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 




பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கு இந்த துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். 

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. பின்னர் இவர்களுக்கான தரவரிசைப் பட்டில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியிடப்படும். இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது.
எஸ்.சி.ஏ. காலியிடங்களுக்கான சேர்க்கை: எஸ்.சி.ஏ. (அருந்ததியினர்) பிரிவினருக்கான பி.இ. இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 



அதுபோல, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான இடங்களில் எஞ்சியுள்ள இடங்களுக்கும், பி.ஆர்க். படிப்பில் எஞ்சியுள்ள இடங்களுக்கும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.