மத்திய பல்கலைக்கழகங்களில் 5600 பணியிடங்கள் காலி

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.




மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும் 2800 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் 1870 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் 258 இடங்களில் காலியாக உள்ளது. இவை தவிர பல்வேறு ஐஐடிக்களில் 324 பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகளில் 96 இடங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்களில் 88, பெங்களூரு மற்றும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் 100 இடங்கள் காலியாக உள்ளன.இவ்வாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறினர்.
Share:

Total Pageviews

Categories