அடுத்த ஆண்டு முதல் ஏடிஎம்.களில் பணம் நிரப்பும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
இதன் மூலம் நகர் புறத்தில் உள்ள ஏடிஎம்.களில் இரவு 9 மணிக்கு பின்னரும், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்.களில் மாலை 6 மணிக்கு பின்னரும் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்று உள்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்பப்படும். பணம் கொண்டு செல்வதற்கு இரு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தாலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். வங்கிகளின் பணம் வசூலிக்கும் தனியார் முகமைகள் முதல் அறை வேளை நாளில் மட்டுமே வசூலித்து ஆயுத பாதுகாப்பு உள்ள வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது 2019ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏடிஎம்.களுக்கு பணம் நிரப்ப செல்லும் வாகனங்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மோசடியை தடுக்கவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் பணம் கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. இவற்றை வங்கி சாராத தனியார் முகமைகள் இயக்கி வருகின்றன. தினமும் இந்த வாகனங்கள் மூலம் ரூ.15,000 ஆயிரம் கோடி வங்கி பணம் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.