Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 20, 2018

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்தார் பஜ்ரங் புனியா


45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நேற்று கோலாகலமுடன் தொடங்கியது. செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.



இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதனை தொடர்ந்து இன்று போட்டிகள் தொடங்கின. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்றார். ’ரவுண்ட் 16’ போட்டியில் உஸ்பெகிஸ்தானின் சிரோஜிதின் கசானோவை தோற்கடித்த பஜ்ரங் புனியா, காலிறுதியில் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல்காசிமை எதிர்கொண்டார். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட புனியா 4-1 என்ற கணக்கில் அப்துல்காசிமை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தார்.



அரையிறுதியில் அற்புதமாக செயல்பட்ட புனியா, மங்கோலியாவின் பாட்சுலூனை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் டைசி டகாடனியுடன் மல்யுத்தத்தில் போட்டியிட்ட புனியா 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டி சென்றார். ஆசிய போட்டியில் இந்த சீசனில் இந்தியா பெற்றுள்ள முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.