Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை!


அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை! காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்


"அப்துல் கலாம் அனைத்து மதத்தினரையும் சரிசமமாக மதித்து, மரியாதை அளித்தவர். இதனை மாணவர்களுக்கு உணர்த்தும்விதத்தில் குரான், பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை வைத்திருக்கிறோம். அதிலிருந்து அவ்வப்போது சில பகுதிகளை வாசிக்கவும் செய்கிறோம்."



அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை! காரைக்குடி பள்ளி ஆச்சர்யம் சிலரின் பெயர்களே மற்றவர்களுக்கு உத்வேகம் தரும் சக்தியாக இருக்கும். அவரின் உழைப்பே அந்தச் சக்தியைத் தந்தது எனத் தனியே சொல்லவேண்டியதில்லை. `மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு பெயரைச் சொல்லுங்க?' என்று கேட்டால், சற்றும் தயங்காமல் பலரும் சொல்லும் பெயர், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

அறிவியல்

இந்தியாவின் தென்கோடியில் பிறந்து, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து, தன்னம்பிக்கைப் பாடம் நடத்தும் வாழ்க்கையை வாழ்ந்தவர். விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் எனப் பதவிகள் உயர்ந்தபோதும், மாணவர்களைச் சந்திப்பதை அவர் நிறுத்திக்கொண்டதே இல்லை. அந்தளவுக்கு மாணவர்கள் மீது அன்பும், அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையும் கொண்டவர். குழந்தைகளும் அவரை தங்களில் ஒருவராக நேசித்துப் பழகினர். இறந்த பின்பும் மாணவர்களுக்கு வழிகாட்டியவாறே உள்ளார். அப்படித்தான், காரைக்குடி அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கலாம் வகுப்பறையாக வாழ்ந்துவருகிறார்.



அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடி. ஶ்ரீகார்த்திகேயன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில்தான் இந்தக் கலாம் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புது முயற்சியை முன்னெடுக்கும் ஆசிரியர் லட்சுமியிடம் பேசினோம்.

``நான் ஆசிரியர் பயிற்சியில் இருந்தபோதே அப்துல் கலாம் ஐயா பற்றிப் படிப்பதில் ரொம்ப ஆர்வம். நமக்கு வேலை கிடைத்ததும், அவரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன். மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஒருவரை நாம் காட்டும்போது, அவரை அப்படியே பின்பற்றுவார்கள். அதனால், சரியான ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு, அப்துல் கலாம் ஐயா மிகப் பொருத்தமானவர் இல்லையா?

என்னுடைய எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் ஒரு முயற்சிதான் கலாம் வகுப்பறை. இங்கே, ஆய்வகம் ஒன்று உள்ளது. நான்கு டம்ளர்களில் நீர் ஊற்றிவைத்து, குச்சியில் தட்டும்போது ஏற்படும் ஓசை மாற்றம் பற்றி விளக்குவது போன்ற எளிமையான அறிவியல் சோதனைகளைச் செய்கிறோம். கலாம் நூலகமும் வைத்துள்ளோம். அதில், அப்துல் கலாம் எழுதிய நூல்கள், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள் எனத் தேடித் தேடிச் சேகரித்துள்ளோம். அவற்றிலிருந்து மாணவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை எடுத்து வாசிக்கச் சொல்வேன். தான் படித்தவற்றை மற்ற மாணவர்களோடு குழுவாக விவாதிக்கச் சொல்வேன். இது அந்த நூலை மற்றவர்களும் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.