
தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆஸ்துமா நோய் தாக்காமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குளிர்பானங்கள்இ ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.
படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறைஇ பெட்ஷிட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் செல்ல கூடாது.
வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.


