Search This Blog

Friday, September 21, 2018

இயற்கை வேளாண்மை, மூலிகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 100 பள்ளிகளில் மாடித் தோட்டம் அமைக்க திட்டம்

0 comments



இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற் படுத்த 100 பள்ளிகளில் மாடித் தோட்டங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

நகர்ப்புறங்களில் மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

அரசு தோட்டக்கலை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பிலும் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது

மேலும் தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மாடித் தோட்டம் அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றன



அண்டை மாநிலமான கேரளாவில் மாடித் தோட்டம் அமைப்பது தொடர்பான இயக்கங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் அளவில், அவர்களே ஆர்வமாக மாடித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்