Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 20, 2018

10ம் வகுப்பு தேர்வுக்கு பெயர் பட்டியல்: பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு


மாணவர்களின் பிறந்த தேதியை,பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு, சரிபார்த்த பின்னரே, 10ம் வகுப்பு பெயர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சராசரியாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல், எமிஸ் இணையதளம் வழியே, ஆன்லைன் மூலம் தயாரிக்கப்படுகிறது.








இதில், மாணவர்களின் பிறந்த தேதியை, பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு, சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய வேண்டும், தேர்வர்கள், 2019, மார்ச், 1ல், 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் வழங்கப்பட்ட பின், பிறந்த தேதியில் மாற்றம் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.