Search This Blog

Wednesday, September 12, 2018

15 நாட்களில் சர்க்கரை நோயை குணப்படுத்த இதை மட்டும் செய்தாலே போதுமாம்!

0 comments



ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக விடுபடுவது கடினம், ஆனால் அதைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
இதனை கட்டுப்படுத்த வீட்டு சமையலறையில் உள்ள ஓர் எளிய பொருளான பட்டையைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 500 மில்லி
பட்டை தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை



முதலில் தேவையான அளவு நீரை சூடேற்றி அதில் ஓட்ஸைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, பின்பு அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து தினமும் காலையில் தொடர்ந்து 15 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள், இந்த ஓட்ஸை சாப்பிட்டால் உயர் நிலையில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, உடல் எடையும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படும்.
பட்டையில் உள்ள மெத்தில்- ஹைட்ராக்ஸிகால்கோன் என்னும் உட்பொருள் தான், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உடலைத் தாக்கும் பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கும்.
எச்சரிக்கை



சர்க்கரை நோயைக் குறைக்க வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின் பட்டையைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு, பின் பயன்படுத்துங்கள்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் பட்டைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் அளவுக்கு அதிகமாக பட்டையை உட்கொண்டால், அது கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.