Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 9, 2018

2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.


ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால்அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது. இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.



ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை. இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.

இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும்.



அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது. அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.