Sunday, September 23, 2018

ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் கலை பயிற்சி

மத்திய கலாசார மையம் சார்பில், ஆசிரியர்களுக்கு, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது



மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், 20 நாட்கள் கொண்ட ஒருங்கிணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது

இதில், கலை மற்றும் கலாசாரம் குறித்து, மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது

நடப்பு கல்வியாண்டில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில், பயிற்சி வழங்கப்படுகிறது.



பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்து, பரிந்துரை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது