Search This Blog

Friday, September 28, 2018

பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி

0 comments
மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. 



சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி, மருத்துவ கவுன்சிலிங்கில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தகுந்த சான்றிதழ்களுடன், இன்று காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும்.




மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து, இடங்கள் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை, நாளை காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம் மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இன்று நேரில் வர முடியாதவர்களும், சான்றிதழ்களுடன், நாளை நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நீட் தேர்வில், பொது பிரிவினர், 119 மதிப்பெண்ணிற்கு குறையாமலும், இதர வகுப்பினரில், 96 மதிப்பெண்ணிற்கு குறையாமலும் உள்ளோர், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.