Search This Blog

Saturday, September 29, 2018

4 மில்லியன் பணிவாய்ப்புகளுடன் புதிய தொலைதொடர்பு கொள்கை : அமைச்சரவை ஒப்புதல்

0 comments
100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், 4 மில்லியன் புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான புதிய தொலைதொடர்பு
கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.



டில்லியில் , பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் மனோஜ் சின்கா கூறியதாவது, தேசிய டிஜிட்டல் கம்யூனிகேசன்ஸ் கொள்கை 2018 திட்டத்தின் கீழ், புதிய தொலைதொடர்பு கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.





100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டிலான இந்த புதிய கொள்கையின் மூலம், வரும் 2022ம் ஆண்டிற்குள், புதிதாக 4 மிலலியன் பேர் பணிவாய்ப்பை பெறுவர். இதன்மூலம், நாட்டின் ஜிடிபி 8 சதவீதம் என்ற நிலையை அடையும் என்று கூறினார்.அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ( ஜிடிபி) உயர்த்தும் வகையிலான இந்த புதிய தொலைதொடர்பு கொள்கை, பயனாளர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, தொழில்நுட்ப அடிப்படையிலும் திறன் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.



இணைய சமநிலைக்கு ( நெட் நியூட்ராலிட்டி) ஆதரவளிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொலைதொடர்பு கொள்கை, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐந்தாம் தலைமுறை இணைய சேவை (5ஜி), IoT (internet of things) மற்றும் M2M (machine to machine) உள்ளிட்டவைகளுக்கு தகுந்த மதிப்பளித்து சர்வதேச அளவிலான மாற்றத்திற்கு,தன்னையே தகவமைத்துக்கொள்ளும் வகையில், இந்த புதிய தொலைதொடர்பு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.