JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, September 26, 2018

740 செவிலியர் பணியிடங்கள் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த பழைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி அகற்றப்பட்டு ரூ.6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டரை திறந்துவைத்தார்.




பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகள் கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. உடல் முழுவதையும் அரை மணி நேரத்தில் எடுக்க வேண்டிய பரிசோதனையை இந்த நவீன கருவி மூலம் 10 நிமிடத்திற்குள் செய்ய முடியும்.


வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவி ரூ.18 கோடியில் இன்னும் 4 மாதத்திற்குள் நிறுவப்பட உள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் கட்டிடம் கட்டப்படும். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டு வரும் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை வெகு விரைவில் திறக்கப்படும்.




தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும். மேலும் 3,300 செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விரைவில் நிரப்பப்படும்.