Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 2, 2018

கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரும் மனு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு


அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத் தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவியம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி, 11 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.*

*இந்த பணி நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.*