JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, September 26, 2018

அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட கோரிக்கை

நாமக்கல்: அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வலியுறுத்தி, கலெக்டர் ஆசியா மரியத்திடம், மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்




தன் விபரம்: தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழிலேயே இட வேண்டும். ஆங்கிலம் தமிழர்களை மொழியால், உணர்வால், எண்ணத்தால் அடிமைப்படுத்துகிறது

மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடு, கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகை, முத்திரைகள் உள்ளிட்ட அனைத்தும், தமிழிலேயே அமைத்தல் வேண்டும்; அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டுமென்று, 1978 ஜூன், 21 பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது