JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 23, 2018

தமிழக அரசின் உத்தரவின்படி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியது

தமிழக அரசின் உத்தரவின் பேரில் சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 



அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி வாரத்தில் 2 நாட்கள் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டெக்வான்டோ, ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் பள்ளி நடைபெறும் நேரங்களில் நடத்த உத்தரவிட்டுள்ளன.




இதற்காக தமிழகத்தில் உள்ள 5,711 உயர்நிலை பள்ளிகளில் தலா நூறு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்காக இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

பள்ளி வளாகத்தில் மட்டுமே இந்த பயிற்சிகள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி ஆசிரியருடன் வகுப்பு ஆசிரியை ஒருவரும் இருக்க வேண்டும், பயிற்சியின்போது மாணவிகளை புகைப்படம் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. 



அதன்படியே மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மூன்று மாதங்கள் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.