
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உணவில் ஆய்வு:இந்நிலையில் சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்









