
இது தொடர்பாக, கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று சயின்ஸ்டைரக்ட் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முஸ்லீம்களின் கல்வி கற்கும் முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் குறித்து தேசிய மாதிரி சர்வேயின் தகவல்களை வைத்து பகுப்பாய்வு செய்த போது முஸ்லீம் சமுதாயத்தினரின் மத்தியில் மாணவ மாணவியர் ஆகிய இரு பாலருக்கிடையே கல்வி கற்கும் நிலையில் வேறுபாடுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. முஸ்லீம் மாணவர்கள் தங்களது குடும்பத்தை காப்பாற்ற பள்ளிக் கல்வியை முடிக்காமல் இடையிலேயே நின்று விடுகின்றனர். ஆனால் முஸ்லீம் மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்கல்வியை முடித்து விட்டு உயர் கல்விக்கும் செல்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.




