JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 14, 2018

உக்கிரம் கொண்ட சுக்கிரன்!





நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் இரண்டாவது கோள் சுக்கிரன் (Venus) பற்றி:
  • வானத்தில் நிலவுக்கு அடுத்ததாகப் பிரகாசமான பொருள், சுக்கிரன்.
  • சுக்கிர கிரகத்தின் மேற்பரப்பு முழுவதும் கந்தக அமிலத்தாலான மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன.
  • சுக்கிரன் கோளுக்கு நிலவுகளோ, வளையங்களோ கிடையாது.
  • சுக்கிரனின் விட்டம் ஏறத்தாழ 12,104 கிமீ.
  • சுக்கிரனில் ஒரு நாள் என்பது 117 பூமி நாட்கள்.
  • சுக்கிரனின் மேற்பரப்பு வெப்பநிலை 471°C
  • மற்ற எல்லாக் கோள்களும் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் சுற்றுகிறது, சுக்கிரன்.
  • நம் சூரியக் குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள், சுக்கிரன்.
  • சுக்கிரனைச் சுற்றி 96.5% கரியமில வாயு இருப்பதால், வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
  • சுக்கிரனின் மேற்பரப்பு முழுவதும் இரும்பு, பாறை, சிலிக்கேட் ஆகியவற்றால் ஆனது. 
- ஆஸிஃபா