JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 14, 2018

கேம்பஸ் இன்டர்வியூ: அதிகரிக்கும் வேலைகள்!




வளாக நேர்முகத் தேர்வு வாயிலாக 28,000 நபர்களைப் பணியமர்த்துவதற்கு டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் வளாக நேர்முகத் தேர்வு வாயிலாக 28,000 நபர்களைப் புதிதாகப் பணியமர்த்துவதற்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவொரு நிறுவனமும் இவ்வளவு நபர்களைப் பணியமர்த்த முன்வரவில்லை. 

டிசிஎஸ் நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவை உயர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் ஒவ்வோர் ஆண்டும் 20,000 புதிய நபர்களுக்கு டிசிஎஸ் வேலைவாய்ப்பு வழங்கியது.

இதுகுறித்து டிசிஎஸ் தலைமைத் துணைத் தலைவரான அஜோய் முகர்ஜி டிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “எங்களது தொழில் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தேவை அதிகரித்திருப்பதைக் கண்டுள்ளோம். 



நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் நாங்கள் ஏற்கெனவே 16,000 நபர்களைப் பணியமர்த்தியுள்ளோம்” என்று கூறினார். செப்டம்பர் காலாண்டில் மட்டும் 10,227 நபர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. 

இது கடந்த 12 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வான எண்ணிக்கையாகும். சில காலமாக வலுவிழந்து காணப்பட்ட வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, சில்லறை வர்த்தகம் ஆகிய இரு துறைகளும் மீண்டெழுந்துள்ளதால் டிசிஎஸ் நிறுவனத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.