JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 2, 2018

ஆமாம்... அதென்ன காந்திக்கணக்கு?

'ஏம்பா... ரொம்ப நாளா பாக்கி பெண்டிங்ல இருக்கே? தரணும்னு நெனைப்பு இருக்கா. இல்ல, காந்திகணக்குதானா?' என்பார்கள்.





இப்படி வராத பணத்தை, காந்திகணக்கு என்று சொல்லுவது வழக்கம். பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால், 'காந்திக்கணக்குன்னா, நாமம்னு அர்த்தம்!'

ஆக, காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்திக் கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரியாது.



மகாத்மா காந்தி, உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் "நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்" என்றார்களாம் வியாபாரிகள். .

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்படுவோம்! .