Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 26, 2018

விண்ணப்பங்களில் குரூப் 'பி' அதிகாரிகள் சான்றொப்பம் இடலாம்


“தனிநபர் சான்றிதழ்கள்,விண்ணப்பங்களை சரிபார்த்து, அரசு துறை 'பி' குரூப் அலுவலர்கள் ஒப்புதல் கையெழுத்திட அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.



அரசு துறைகளில் பணியில் சேர்வதற்கான விண்ணப்ப ஆவணங்களின் உண்மைத் தன்மையை கண்டறிய சான்றொப்பமிடும் அதிகாரிகளை 34 ஆண்டுகளுக்கு முன், பணியாளர் நல சீர்த்திருத்தத்துறைைய நியமித்தது.


2000ல் அந்த முறை மாற்றப்பட்டு, சுய ஆவண சான்றொப்பம் அளிக்கும் முறை (செல்ப் அட்டெஸ்டட்) முறை அமலானது.தற்போது அரசுத்துறை பணியாளர்களின் 'சர்வீஸ் ரிக்கார்டு'கள் டிஜிட்டல் மயமாக்குவதில் பிரச்னைகள் ஏற்பட்டன. 




இதனை தவிர்க்கும் நோக்கில் தற்போது மீண்டும், சுய ஆவண சான்றொப்பம் அளிக்கும் முறையை ரத்து செய்து, குரூப் 'பி' நிலையில் உள்ள அதிகாரிகள், பணியாளர் சீர்த்திருத்தத்துறையால் அனுமதி பெற்ற அரசு அலுவலர்கள், சட்டத்துறை அங்கீகாரம் பெற்ற வழங்கறிஞர்கள் மட்டுமே சான்றொப்பமிட வேண்டும் என பணியாளர் சீர்த்திருத்தத்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இத்தகவல் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது