இந்த விவரங்களை யுஜிசி-யின் www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.
நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே...: இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.
அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் எவை?:இந்த நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் யுஜிசி அங்கீகாரம் பெற்றவை எவை என்ற விவரத்தை யுஜிசி புதன்கிழமை வெளியிட உள்ளது. இந்த விவரங்களை மாணவர்கள் யுஜிசி இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
30 நாள் அவகாசம்: கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சேர்க்கை நடத்தப்படக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற, உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.