Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

ஹாரி பாட்டர் கதையில் புதிய பாடதிட்டம் அறிமுகம்


புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ஹாரி பாட்டர் கதையை அடிப்படையாக வைத்து, சட்டம் குறித்து பயிற்றுவிக்கும் புதிய பாடதிட்டத்தை, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த, தேசிய நீதியியல் அறிவியல் பல்கலை அறிமுகம் செய்ய உள்ளது.





மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தாபானர்ஜி தலைமையிலான, திரிணமுல்காங்கிரஸ் அரசுஅமைந்துள்ளது.

இங்குள்ளகோல்கட்டாவில், என்.யு.ஜே.எஸ்.எனப்படும், தேசிய நீதியியல் அறிவியல்பல்கலை இயங்கி வருகிறது.இங்குபடிக்கும் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுமாணவர்களுக்கு, விருப்ப பாடமாக,புகழ்பெற்ற ஆங்கில நாவலான, &'ஹாரி பாட்டர்&' கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்டுள்ள பாடம், அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இது குறித்து, இந்த பாடதிட்டத்தை வடிவமைத்துள்ள, உதவி பேராசிரியர் ஷோவிக் குமார் குஹா கூறியதாவது:

பிரபல நாவலாசிரியர், ஜே.கே. ரோவ்லிங் எழுதிய, ஹாரி பாட்டர் நாவல்கள் உலகப்புகழ்பெற்றவை. அவர் எழுதியுள்ள, ஏழு நாவல்கள், இதுவரை, எட்டு திரைப்படங்களாகவந்துள்ளன.மாணவர்கள், ஐந்து ஆண்டுகள் சட்டம் படிக்கின்றனர். அதில் அவர்களுக்குஆர்வம் ஏற்படுத்தும் வகையில், இந்த பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளேன்.ஹாரிபாட்டர் கதைகளில், உண்மையை சொல்லாத குழந்தைகள் துன்புறுத்தப்படும்; எந்த சட்டஆதரவும் இல்லாமல் துன்புறுத்துவது, சிறையில் அடைப்பது போன்ற காட்சிகள் உள்ளன.



அதே போல், மறுவாழ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல், சிறையில் கடுமையானதண்டனைகள் வழங்கப்படும்.இது போன்ற காட்சிகளுடன், தற்போது நாட்டில்நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒப்பிட்டு, நம் சட்டம் குறித்து விளக்குவதே, இந்தபாடத்திட்டத்தின் நோக்கம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Source link attached > Please click here to read more