Search This Blog

Tuesday, October 23, 2018

`எக்ஸ்ரே மூலம் விலங்குகளின் உடல்நிலை கண்காணிப்பு!' - அசத்தும் உயிரியல் பூங்கா

0 comments
அமெரிக்காவின் ஓரகன் மாகாணத்தில் ஓரகன் உயிரியல் பூங்கா செயல்படுகிறது. இந்தப் பூங்காவில் இருக்கிற விலங்குகளுக்கு மருத்துவ
பரிசோதனை செய்த எக்ஸ்ரே படங்களைப் பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டிருக்கிறது.



உயிரியல் பூங்காவில் இருக்கிற பச்சோந்தி, புலி, கழுகு, வௌவால் என அனைத்து விலங்குகளுக்கும் தினசரி மருத்துவ பரிசோதனையை பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்லா விலங்குகளுக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து வருகிறது.





`Digital radiology' முறையைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு வேகமாகவும் எளிதாகவும் எக்ஸ்ரே எடுக்க முடிகிறதெனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Digital radiology முறையைப் பயன்படுத்துவதன் மூலம் விலங்குகளுக்குக் குறைந்த அளவே அனஸ்தீசியா கொடுக்கப்படுவதால் அவற்றின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுகிறதெனவும் தெரிவித்திருக்கிறது.

இந்த முறையைப் பயன்படுத்தும் பொழுது விலங்குகளின் எக்ஸ்ரே மற்றும் தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகின்றன. 320 பவுண்டட் கொண்ட புலிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கென்று பிரத்தியேகமான எக்ஸ்ரே இயந்திரத்தை 2009-ம் ஆண்டு செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சையளிக்கும் Banfield என்கிற மருத்துவமனை, பூங்கா நிர்வாகத்திடம் வழங்கியிருக்கிறது.