Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Wednesday, November 21, 2018

டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.



இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 23ல், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.



நிர்வாக காரணங்களால், கவுன்சிலிங், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, பாராமெடிக்கல் சான்றிதழ் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 23 முதல், 28ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலிங், டிச., 3 முதல், 7ம் தேதி வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment