
கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா?
பொதுவாக சாதாரண நீரில் பல்வேறு விதமான வாயுக்களும் மினரல்களும் இருக்கும். தண்ணீரில் உள்ள மினரல்கள் நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமானவை. அதை நாம் அடுப்பில் வைத்து சூடேற்றும் பொழுது, அதில் உள்ள வாயுக்களும் மினரல்களும் வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு, அதிலுள்ள மினரல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுகின்றன.
நீண்ட நேரம் காய்ச்சுதல்:
தண்ணீரை நீண்ட நேரம் காய்ச்சிக் கொண்டே இருந்தாலும் அல்லது ஆறிய பின் மீண்டும் மீண்டும் காய்ச்சினாலோ உடலுக்கு விரும்பத்தகாத வேதிப்பொருள்கள் போய்ச் சேரும். குறிப்பாக, நைட்ரேட்டுகள், அர்செனிக் மற்றும் புளோரைடு போன்ற காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் அந் நீருக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.
பொதுவாக நாம் தண்ணீரை கொதிக்க வைத்து அதை குளிர்வித்து மீண்டும் காய்ச்சுவது தேவையில்லாமல் உங்களுடைய ஆரோக்கியத்துக்கு வைக்கும் வேட்டு. உதாரணமாக, டீ வைக்கும் பாத்திரத்தில் டீ வைப்பதற்காக கொஞ்சம் தண்ணீர் வைத்திருக்கீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, பாதியில் அதில் உள்ள தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று நினைத்து மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி காய வைக்கும் பழக்கம் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கிறது. அது உங்களுடைய உயிருக்கே உழை வைக்கும் முயற்சியாகும்.
இப்படி உள்ள தண்ணீரில் புளோரைடு அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அந்த புளோரைடு அதிக அளவில் நம்முடைய உடலுக்குள் செல்லுகின்ற பொழுது, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகின்றன. அதனால் தான் நிறைய குழந்தைகள் நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்





No comments:
Post a Comment