JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, November 4, 2018

ஒன்பது, பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவியருக்கு கராத்தே பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில், 49 அரசு உயர்நிலை பள்ளிகளில்,
மாணவியருக்கு மூன்று மாத கராத்தே தற்காப்பு பயிற்சி வகுப்பு, நடந்து வருகிறது*



இதுபற்றி, ஈரோடு மாவட்ட கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது*

பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலையை கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது*

இதன்படி, தமிழகம் முழுவதிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியருக்கு மட்டும், கட்டா மற்றும் கும்டே பிரிவில் உள்ள தற்காப்பு அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது*

அந்தந்த மாவட்டத்தில், பதிவு பெற்ற சங்கம் மூலம், பெண் கராத்தே பயிற்சியாளரால் வழங்கப்படும். நவ., 1ல் தொடங்கிய பயிற்சி, மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்*



ஈரோடு மாவட்டத்தில், 49 அரசு உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள், மாலை, 3:30 மணி முதல், 4:30 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பெண் ஆசிரியர், பயிற்சியின்போது உடனிருப்பர். இவ்வாறு அவர் கூறினார்*