Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 21, 2018

ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றியமைப்பு


கஜா புயல் பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பாலிடெக்னிக்குகளுக்கான டிப்ளமோ தேர்வுகள், மீண்டும் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கு கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வு வரும் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுபோல, கடந்த 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு வரும் 27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி மாற்றப்பட்டிருந்தன. இதுவும் வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



மற்ற தேர்வுகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நாள்களிலேயே நடைபெறும். அதாவது கடந்த 19-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட 26-ஆம் தேதியும், 20-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு வரும் 28-ஆம் தேதியும் நடத்தப்படும்.



No comments:

Post a Comment