Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Wednesday, November 21, 2018

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது

மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம், வரும், 9ம் தேதி நடத்துகிறது



நாடு முழுவதும், 92 நகரங்களில், 2,296 மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு

முதல் தாள் தேர்வு, டிச., 9 காலை, 9:30 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணிக்கு முடியும்; இரண்டாம் தாள் தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 மணிக்கு முடியும்.




தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், http://www.ctet.nic.in என்ற இணையதளத்தில், நாளை வெளியிடப்படுகிறது

இந்த, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வரும், 30ம் தேதிக்குள், சி.பி.எஸ்.இ.,யை உரிய ஆவணங்களுடன் அணுகி, அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment