மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்துக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 'ப்ளூபிரின்ட்' எனும் தேர்வுக்கு, வழிமுறைகள் எதுவும் வழங்கப்படாமல், புத்தகத்தின் எப்பகுதியிலிருந்தும், சிந்தனைத்திறனை தூண்டும்படி வினாக்கள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பிளஸ் 1 வினாத்தாள் வடிவமைப்பு குறித்த குழப்பம், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இருந்தது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு தயாராவதில், சிக்கல் நிலவியது. தற்போது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்துக்கு, வினாத்தாள் மாதிரிகள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இணையதளத்தில், மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மாணவர்களுக்கு வழங்கி, தேர்வுக்கு தயார்படுத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Subscribe Us
Sunday, December 9, 2018
Home
Unlabelled
மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு
மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment