ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளைக் கொண்ட குடிமைப் பணித் தேர்வுகளை எழுதும் பொது பிரிவினரின் அதிகபட்ச வயதுவரம்பை 30-இல் இருந்து 27-ஆக குறைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022-ஆம் ஆண்டில், புதிய இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான திட்ட வடிவத்தை, புதிய இந்தியாவுக்கான உத்திகள் என்ற பெயரில் நீதி ஆயோக் அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குடிமைப்பணித் தேர்வு நடைமுறைகளில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த தேர்வு முறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தொடர்ச்சியான பணியாகும். அதனடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டுக்குள் குடிமைப் பணி தேர்வு எழுதும் பொதுப் பிரிவினரின் அதிகபட்ச வயதுவரம்பு 27-ஆக குறைக்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் 60-க்கும் மேற்பட்ட குடிமைப் பணிகள் உள்ளது. அவற்றை குறைக்க வேண்டும். நாடு முழுவதும் பொதுவான முறையில் ஒரு தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின்னர் தேர்வரின் திறமைக்கேற்ப அவருக்கானதுறை ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து குடிமைப் பணி தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்தி அகில இந்திய தரவரிசை வெளியிடப்பட வேண்டும். மாநில அரசுகளும் இந்த முறையை பின்பற்றிக் கொள்ள ஊக்குவிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.
அகில இந்திய நீதித்துறை தேர்வு: சட்டம் படித்த திறமைமிக்க பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில், கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அகில இந்திய நீதித்துறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்ட புதிய இந்தியாவுக்கான அறிக்கையில், அகில இந்திய அளவில் தரவரிசை நிர்ணயித்து அதனடிப்படையில் பணி நியமனம் வழங்குவது உள்ளிட்ட தேர்வு முறைகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்த வேண்டும். கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், நீதி ஆலோசகர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகளை யுபிஎஸ்இ நடத்த வேண்டும். இதன் மூலம் இளைய தலைமுறையுடைய நிர்வாகம் ஏற்படுத்தப்படும். இந்த முறை நிர்வாகத்தில் பொறுப்புடைமையை அதிகரிக்க உதவும்.
மேலும், தீர்ப்பு வழங்குவதை துரிதப்படுத்தும் வகையில், காணொளி காட்சி வசதிகள்அனைத்து நீதிமன்றங்களிலும் கொண்டு வர வேண்டும். தற்போதும் இந்த வசதி சில நீதிமன்றங்களில் பயனில் உள்ளது. ஆனால் அது சரிவர பயன்படுத்தப்படுவதில்லை.
எளிதாக நீதி வழங்கும் மாநிலங்களின் பட்டியலும், சிறப்பாக செயல்படும் நீதிபதிகளின் பட்டியிலும் வெளியிடுவது நீதித்துறை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதவும் என்று பரிந்துரைத்திருந்தது.
கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அகில இந்திய தேர்வு நடத்தும் முறையை ஏற்கெனவே மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதற்கு நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில், 9 நீதிமன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment