பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில் முன்னதாக வெளியானதாகக் கூறப்படும் வேதியியல் பாடத்துக்கான வினாத் தாளை, திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தவில்லை என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில், வேதியியல் பாடத்துக்கான தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், வேதியியல் பாட வினாத் தாள், தேர்வுக்கு முன்னதாகவே வெளியானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கட்செவி அஞ்சல் மூலம் பரவிய அந்த வினாத் தாள், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெளியானதாகவும் கூறப்பட்டது. தற்போது தேர்வு முடிந்துவிட்ட நிலையில், இது தொடர்பான செய்தி வெளியானதால், தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தகுமார் கூறியது:
தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுக்காக 3 வகையான வினாத் தாள்கள் பயன் படுத்தப்பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை வெளியானதாகக் கூறப்படும் வேதியியல் பாட வினாத் தாள், திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

No comments:
Post a Comment