Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 1, 2018

அண்ணாமலைப் பல்கலை: தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்.பி.ஏ, ஐ.டி. உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான அவகாசம் 31-12-2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விண்ணப்பங்களை பெறவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். 



தமிழ், ஆங்கிலவழி படிப்பும், நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு. படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி மையத்தை 04144 - 238043, 238044, 238045, 238046, 238047 என்ற எண்களிலும், ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். 




விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment