தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள்
தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வி.சரோஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அரூரில் அமைச்சர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் கூறியது :
தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும் இடங்களில் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 2,383 அரசு நடுநிலைப் பள்ளிகளில் முதல் கட்டமாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தினால் சுமார் 52,995 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா சீருடைகள், ஷூ வடிவிலான காலணிகள், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள், விளையாட்டுப் பயிற்சிகள், தனித்திறன் பயிற்சி, மத்திய அரசு பாடத் திட்டத்தின் அடிப்படையில் தரமான கல்வி அளிக்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment