பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் உடல்தகுதியை மேம்படுத்த விளையாட்டு மற்றும் உடற்கல்வியை கட்டாய மாக்க வேண்டும் என கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்கள் கருது கிறார்கள்.

அண்மையில் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் விளை யாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போது மயங்கி விழுந்து உயிரிழந் தார். அக்கல்லூரியில் ஸ்போர்ட் பார் ஆல் என்ற பெயரில் விளையாட்டு கட்டாயமாக்கப் பட்டிருந்தது. எதிர்பாராத மரண சம்பவத்தை தொடர்ந்து, இது போன்ற கட்டாய விளையாட்டு முறையை ரத்துசெய்ய வேண் டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
ஆனால், மாணவ-மாணவி களின் உடல்நலனையும் ஆரோக் கியத்தையும் மனதில் கொண்டு, ஒரு நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட கட்டாய விளையாட்டு முறையை ரத்துசெய்ய வேண் டிய சூழல் நேர்ந்திருப்பது, கல்வியாளர்கள், சமூக ஆர்வ லர்கள், விளையாட்டு வீரர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.
விளையாட்டு மீது ஈடுபாடு இல்லாததால் மாணவ-மாணவி கள் வகுப்பு அல்லாத நேரங் களில் கணினியிலும், செல்போன் களிலும் மூழ்குகிறார்கள். இதனால் மனரீதியாகவும் பாதிக் கப்படுகிறார்கள். இத்தகைய சூழ லில் அவர்களை உடல், மனரீதியாக வலிமைமிக்கவர் களாக உருவாக்க, பாடத்திட்டத் தில் விளையாட்டை கட்டாய மாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர் கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வலியுறுத்துகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகள்:
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரி யர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.சங்கரபெருமாள்: 1976-ல் எம்ஜிஆர் ஆட்சியில் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, வாரத்துக்கு 2 வகுப்பு கள் உடற்கல்வி பாடத்துக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், காலப் போக்கில் உடற்கல்வி வகுப்புகள் பெயரளவுக்கு நடந்தன.
போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. விளையாட்டு சாதனங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வில்லை. ஒருகட்டத்தில் உடற் கல்வி வகுப்புகள் மற்ற பாட ஆசிரியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் மாணவர் களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உடற்கல்வி பாடத்தைக் கட்டாயமாக்கினால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் பிறக்கும்.
தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன அமைப்பாளர் ரத்தினசபாபதி: தற்போது பள்ளிகளில் உடற் கல்விக்கு முக்கியத்துவமே கொடுக்கப்பதில்லை. தேவை யான ஆசிரியர்களும் கிடை யாது. முறையான பாடத்திட்ட மும் இல்லை. பல கல்வி நிறு வனங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. உடற் கல்வி நிபுணர்கள், கல்வியாளர் கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து பாடத்திட்டத்தையும் வழிகாட்டு நெறிமுறைகளை யும் உருவாக்க வேண்டும்.
மத்திய கலால்துறை கண் காணிப்பாளரும், தடகள பயிற்சி யாளருமான பி.நாகராஜன் (விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர்): வெளிநாடு களில் விளையாட்டை தொழில் சார்ந்த விஷயமாக பார்க்கிறார் கள். ஆனால், நம் நாட்டில் விளை யாட்டு இன்னும் ஒரு பொழுது போக்காகவே கருதப்படுகிறது. மாணவர்களுக்கு உடல் ஆரோக் கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதோடு மட்டுமின்றி உடற்கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அதிகள வில் வழங்கப்பட வேண்டும். தற்போது, தமிழக அரசுப் பணி யில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே காவல்துறையில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது.

No comments:
Post a Comment