பிளஸ் 1, பிளஸ் 2: பிப். 6 முதல் செய்முறை தேர்வு


தமிழகத்தில் பிப். 6-ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.



மாநில பாடத் திட்டத்தில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர். அவர்களுக்கான, செய்முறைத் தேர்வு பயிற்சிகள் தொடங்கியுள்ளன.
பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று வரும் பிப். 6-இல் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும்.
இந்தத் தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல் வினாத்தாள் தயாரித்து முறைகேடுகளின்றி நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here 

Join Our Facebook Page Click Here
Share:

Categories