Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 11, 2019

வரலாற்றில் இன்று 11.01.2019


ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.





நிகழ்வுகள்

1055 – தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.
1569 – முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
1782 – பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
1787 – யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1805 – மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.
1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1879 – ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
1878 – பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.





1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
1943 – ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
1946 – என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
1957 – ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
1972 – கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.

பிறப்புகள்

1755 = அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1804)
1786 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)
1859 – கர்சன் பிரபு, ஆங்கிலேய அரசியல்வாதி இந்தியத் தலைமை ஆளுநர் (இ. 1925)
1906 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவீடிய வேதியியலாளர் (இ. 2008)
1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)
1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1982 – சன் யி-ஜின் (நடிகை), தென்கொரிய நடிகை

இறப்புகள்





314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
1753 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)
1902 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1862)
1928 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)
1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
1966 – லால் பகதூர் சாஸ்திரி, 2வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
2000 – பெட்டி ஆர்க்டேல், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1907)
2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
2008 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)
2013 – ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)
2014 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)





சிறப்பு நாள்

அல்பேனியா – குடியரசு நாள் (1946)
நேபாளம் – ஐக்கிய நாள்