உலகத் தமிழிசை மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 23.01.2019 புதன் அன்று தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உலகத் தமிழிசை மாநாடு 25.04.2019- 26.04.2019 ஆகிய நாட்களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம், தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் முனைவர் இரா. மாதவி, கானல்வரி கலை இலக்கிய மன்றத்தின் செயலர் முனைவர் இரத்தின. புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.