‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் காலவறையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை அடிப்படையில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. தற்காலிக ஆசிரியர் பணி இடத்துக்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டன.
2-வது நாளான நேற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்ப படிவங்களை கொடுப்பதற்கு கூட்டம் அலைமோதியது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். பட்டதாரிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்தனர். விண்ணப்ப படிவங்களோடு சான்றிதழ்களின் நகல்களையும் அவர்கள் இணைத்து வழங்கினார்கள். சிலர் தங்கள் பிள்ளையும் உடன் அழைத்து வந்திருந்தனர். சென்னையை பொறுத்தமட்டில் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களுடன் ஏராளமானோர் குவிந்தனர்.
தற்காலிக ஆசிரியர் பதவிக்கு வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களில் அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28-ந்தேதி (இன்று) காலை 9 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணி ஏற்க வேண்டும்.
இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. இந்த ஆணை அடிப்படையில் அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படாது.
அரசால் அறிவிக்கப்படும் போது உடனடியாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
பணி ஏற்ற நாள் முதல் தொகுப்பூதியம் கணக்கீட்டு வழங்கப்படும்.
தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரம் அரசால் நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே பெற்று வழங்கப்படும்.