Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 31, 2019

அமெரிக்காவில் தமிழ் மொழிக்குக் கிடைத்த சிறப்பு...வைரமுத்து நன்றி தெரிவித்து டுவிட்...





கரோலினா மாநிலத்தில் அதிகளவிலான தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் ஜனவரி மாதத்தை தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்ததற்கு, அம்மாநில கவர்னர் ராய் கூப்பர் தமிழச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்றார். இதனையடுத்து தற்போது ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக கரோலினா அரசு அறிவித்துள்ளது.



இதுசம்பந்தமாக ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் தமிழ் ஒழியும் ஒன்று. வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் மக்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். வரலாற்று வளர்ச்சிக்கு இது உறுதுணையாக உள்ளது. தமிழர்களுட இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 'ஜனவரியைத் தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்திருக்கும் அமெரிக்க வடகரோலினா ஆளுநர் ராய் கூப்பர் அவர்களுக்கு என நன்றி.



ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாதும் கேளீர் என்று உலகத்தைச் சிந்தித்த தமிழை இன்று உலகம் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இது தமிழுக்குப் பெருமை. 'இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.