Wednesday, January 16, 2019

தோட்டக்கலைத்துறையில் தொழில் பழகுனர் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு




தோட்டக்கலைத்துறை சார்பில் மத்திய நிதியுதவியுடன் விவசாயிகளுக்கு உதவ, 500 தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாத உதவித்தொகையாக 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சி பெற 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியுடன் தோட்டக்கலையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிராட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரீசியன், பிளம்பர், பிட்டர், கார்டனர் துறையில் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கலாம்.




ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி பெற்றபின் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் 'ஆன்லைன்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் சான்றிதழ் வழங்கப்படும்.இச்சான்றிதழ் பெற்றோருக்கு மத்திய, மாநில அரசு மற்றும் அயல்நாடுகளில் பணி வாய்ப்புள்ளது.


விரும்புவோர் tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ddhsivagangai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என, சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்