முதல்வர்எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பெண்கள் உள்பட சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறும் போது, தற்போது 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எங்களை அழைத்து பேசும்வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என கூறினார்.






