Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 30, 2019

நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது-தலைமை செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு


பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டம் வாபஸ் பெறுவதாக தலைமை செயலக ஊழியர் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணி சாமி அறிவித்துள்ளார்.


ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்திஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. 400கும் மேற்பட்ட ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, இன்று சென்னை திருவல்லிக்கேணியில்ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் போராட்டத்தை கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


முதல்வரின் கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ ஜியோகூட்டமைப்பின் தலைவர் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார். இதையடுத்துபிப்ரவரி 1ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டமும்,தலைமை செயலக ஊழியர்கள் போராட்டமும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.